முத்தையா இயக்கத்தில் ஆர்யா: பூஜையுடன் தொடங்கியது புதிய படம்!

முத்தையா இயக்கத்தில் ஆர்யா: பூஜையுடன் தொடங்கியது புதிய படம்!

இயக்குநர் முத்தையா இயக்கத்தில் நடிகர் ஆர்யா நடிக்கும் ‘ஆர்யா 34’ படம், பூஜையுடன் இன்று தொடங்கியது.

இந்திய சினிமாவில் பல வெற்றிப்படங்களைத் தந்த ஜீ ஸ்டூடியோஸ் நிறுவனம், டிரம்ஸ்டிக்ஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து புதிய படம் ஒன்றைத் தயாரிக்கின்றன. நடிகர் ஆர்யா இப்படத்தின் நாயகனாக நடிக்கிறார். இப்படத்துக்கு ‘ஆர்யா24’ எனத் தற்காலிகமாகப் பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.

இயக்குநர் கௌதம் மேனனின் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் அறிமுகமாகி, ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை சித்தி இதானி இப்படத்தில் நாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். ஜீ.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார், வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். வீரமணி கலை இயக்கம் செய்கிறார்.

இப்படத்தின் பூஜை இன்று காலை நடந்தது. இதில் நடிகர் ஆர்யா, இயக்குநர் முத்தையா, நடிகை சித்தி இதானி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

கிராமிய வாழ்க்கை சார்ந்து தொடர்ந்து படங்களை இயக்கிவரும் முத்தையாவின் இயக்கத்தில் ஆர்யா நடிப்பது ரசிர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in