1540 கி.மீ சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவுற்றது: அடுத்த சவாலுக்குத் தயாராகும் நடிகர் ஆர்யா

1540 கி.மீ சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவுற்றது: அடுத்த சவாலுக்குத் தயாராகும் நடிகர் ஆர்யா

’சார்பட்டா பரம்பரை’ படத்துக்குப் பிறகு ஆர்யா நடித்துள்ள படம், ’கேப்டன்’. 'டெடி' படத்துக்கு பிறகு இயக்குநர் சக்தி சௌந்தர்ராஜனுடன் ஆர்யா இணைந்துள்ள படம் இது. ஐஸ்வர்யா லக்ஷ்மி, சிம்ரன் உள்பட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு எஸ்.யுவா ஒளிப்பதிவு செய்துள்ளார். சயின்ஸ் பிக்சன் படமாக உருவாகும் இதை, ஆர்யாவின் தி ஷோ பீப்பிள் மற்றும் திங் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் தயாரித்துள்ளது.

நடிகர், ஆர்யா சைக்கிளிங்கில் ஆர்வம் கொண்டவர். குழுவாக இணைந்து சைக்கிளிங் சென்று வருகிறார். உலக நாடுகளில் நடக்கும் சைக்கிள் போட்டிகளில் கலந்துகொள்ளும் அவர், சமீபத்தில் இங்கிலாந்தில் நடைபெற்ற, லண்டன்- எடின்பர்க்-லண்டன் 1540 கி.மீ சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சியில் தனது குழுவினருடன் கலந்துகொண்டு நிறைவு செய்துள்ளார்.

இதுபற்றி ட்விட்டரில் தெரிவித்துள்ள அவர், ’லண்டன் எடின்பர்க் லண்டன் 1540 கி.மீ சைக்கிள் ஓட்டும் நிகழ்ச்சி வெற்றிகரமாக முடிவுற்றது. என் வாழ்க்கையில் மிகவும் சவாலான முயற்சிகளில் இதுவும் ஒன்று. என் குடும்பத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. அடுத்த சவாலுக்கு தயார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிகழ்ச்சிக்கான ஆர்யா அணியின் ஜெர்ஸியை, நடிகர் சூர்யா கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிட்டிருந்தார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in