ரஜினியுடன் மோதவிருக்கும் ‘ஸ்டைலிஷ்’ வில்லன் யார் தெரியுமா?

ரஜினியுடன் மோதவிருக்கும் ‘ஸ்டைலிஷ்’ வில்லன் யார் தெரியுமா?

தமிழ்த் திரையுலகில் இன்று வரை உச்ச நட்சத்திரமாகக் கொண்டாடப்படும் ரஜினிகாந்த், இளம் தலைமுறை இயக்குநர்களுடன் இணைந்து அடுத்தடுத்த படங்களில் நடித்துவருகிறார். தற்போது, ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துவரும் ரஜினி, அடுத்து நடிக்கப்போகும் படம் குறித்து தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் சிவா இயக்கிய ‘அண்ணாத்த’ திரைப்படத்தைத் தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ‘ஜெயிலர்’ திரைப்படத்தில் ரஜினி நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படம் முடியும் முன்பே ரஜினியின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் இணையத்தில் பரவத் தொடங்கிவிட்டன. அதன்படி ரஜினியின் அடுத்த திரைப்படத்தை இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்குவார் என்றும் அப்படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கும் என்றும் தகவல்கள் பரவின.

இந்நிலையில், அப்படத்தில் நடிகர் அரவிந்த் சாமி நடிக்கவிருப்பதாகவும், அவர் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கவே அதிக வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’ படத்தில் ஸ்டைலிஷ் வில்லனாக நடித்து அசத்திய அரவிந்த் சாமி, ரஜினியின் புதிய படத்தில் இணையவிருப்பது ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in