ரஜினியின் 170-வது படத்தை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்

ரஜினியின் 170-வது படத்தை இயக்குகிறார் அருண்ராஜா காமராஜ்

ரஜினிகாந்தின் 170 வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருக்கிறார்.

நடிகர் ரஜினிகாந்த் ’அண்ணாத்த’ படத்துக்குப் பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கும் படத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்தின் 169 வது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. அனிருத் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் ரஜினிகாந்தின் 170 வது படத்தை அருண்ராஜா காமராஜ் இயக்க இருக்கிறார்.

அருண்ராஜா காமராஜ் - ரஜினிகாந்த்
அருண்ராஜா காமராஜ் - ரஜினிகாந்த்

‘ராஜா ராணி’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் அருண்ராஜா காமராஜ். ‘மான் கராத்தே’, ‘ரெமோ’, ’மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், ‘தெறி’, ‘காக்கிசட்டை’, ‘கபாலி’, ‘காலா’ உள்பட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். பாடல்களை பாடியும் இருக்கிறார்.

ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் 2018 ஆம் ஆண்டு ‘கனா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இந்தப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரித்திருந்தார். தற்போது போனி கபூர் தயாரிப்பில், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் ’நெஞ்சுக்கு நீதி’ படத்தை இயக்கியுள்ளார்.

இதையடுத்து அவர் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இதை போனிகபூர் தயாரிக்க இருக்கிறார். அருண் ராஜா, ’கபாலி’படத்தில் ரஜினிக்காக, ’நெருப்புடா’ பாடலை எழுதி இருந்தார்.

Related Stories

No stories found.