அருண் விஜய்யின் 'யானை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண் விஜய்யின் 'யானை’ ரிலீஸ் தேதி அறிவிப்பு

அருண் விஜய் நடித்துள்ள 'யானை' படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

ஹரி இயக்கத்தில் அருண் விஜய் ஹீரோவாக நடிக்கும் படம், 'யானை'. இதில் நடிகை பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் சமுத்திரக்கனி, ராதிகா சரத்குமார், ராஜேஷ், போஸ் வெங்கட், யோகி பாபு, இமான் அண்ணாச்சி உள்பட பலர் நடித்துள்ளனர். டிரம்ஸ்டிக் புரொடக்சன்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் யானை படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. இந்நிலையில் தற்போது இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி மே மாதம் 6-ம் தேதி இந்தப் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. தெலுங்கில் இந்தப் படம் `எனுகு' என்ற பெயரில் அதே தேதியில் ரிலீஸ் ஆகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in