ஏவி.எம் தயாரிக்கும் வெப் தொடரில் அருண் விஜய்!

ஏவி.எம் தயாரிக்கும் வெப் தொடரில் அருண் விஜய்!

ஏவி.எம் நிறுவனம் தயாரித்துள்ள தமிழ் ராக்கர்ஸ் வெப் தொடரில் அருண் விஜய் நடித்திருக்கிறார்.

திரைப்படத் தயாரிப்புகளை குறைத்துக்கொண்ட பிரபல ஏவி.எம் நிறுவனம் இப்போது வெப் தொடர் ஒன்றைத் தயாரித்துள்ளது. ’தமிழ் ராக்கர்ஸ்’ என்ற இந்த வெப் தொடரில் அருண் விஜய் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். அவருடன் வாணி போஜன், ஐஸ்வர்யா மேனன், அழகம் பெருமாள், வினோதினி, எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்துள்ளனர்.

சோனி லிவ் ஓடிடி தளத்துக்காக உருவாகி இருக்கும் இந்த தொடரை, ஏவி.எம் நிறுவனம் தயாரித்துள்ளது. மனோஜ்குமார் கலைவாணன் இதன் கதையை எழுதியுள்ளார். 'ஈரம்', 'வல்லினம்', 'குற்றம் 23' ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இதன் டீசர் வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

இயக்குநர் அறிவழகன்
இயக்குநர் அறிவழகன்

‘இந்த தொடருக்காக, ஏவி.எம் நிறுவனம் மற்றும் சோனி லிவ் தளத்துடன் இணைந்ததில் மகிழ்ச்சி. திருட்டுத்தனமாக திரைப்படங்களை வெளியிடும் இணையதளங்களின் இருண்ட பக்கத்தையும் சினிமாத்துறை அதனுடன் எவ்வாறு போராடுகிறது என்பதையும் இந்த தொடர் விவரிக்கிறது. அருண் விஜய் இந்த தொடரில் இணைந்திருப்பது பெருமையாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் அறிவழகன்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in