அருண் விஜயின் 'அச்சம் என்பது இல்லையே' ஃபர்ஸ்ட் லுக்!

அருண் விஜயின் 'அச்சம் என்பது இல்லையே' ஃபர்ஸ்ட் லுக்!

அருண் விஜய் நடிக்கும் 'அச்சம் என்பது இல்லையே' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

'கிரீடம்', 'தெய்வத் திருமகள்', 'மதராசபட்டினம்' உள்ளிட்ட வெற்றிப் படங்களை இயக்கியவர் இயக்குனர் விஜய். இவர் அடுத்ததாக அருண் விஜய் நடிப்பில் 'அச்சம் என்பது இல்லையே' திரைப்படத்தை இயக்கி வருகிறார். அருண் விஜய் பிறந்தநாளான இன்று இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் எமி ஜாக்சன் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் நடிக்கின்றனர். படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். ஸ்ரீ சீரடி சாய் மூவிஸ் மற்றும் நியூ மார்ச் பர்ஸ்ட் பிக்சர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. ஏற்கெனவே இப்படத்தின் அறிமுக வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in