`இவர்களால்தான் படத்தின் தரம் குறைகிறது'- விஜய், அஜித்தை சாடிய அருண் பாண்டியன்

`இவர்களால்தான் படத்தின் தரம் குறைகிறது'- விஜய், அஜித்தை சாடிய அருண் பாண்டியன்

"நடிகர்கள் விஜய், அஜித் ஆகியோர் 90 சதவீதம் சம்பளமாக பெறுவதால் படத்தின் தரம் குறைகிறது" என்று நடிகர் அருண் பாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.

ராம்நாத் பழனிக்குமார் இயக்கத்தில் கருணாஸ் நடித்துள்ள படம் `ஆதார்’. இந்தப் படத்தில் அருண்பாண்டியன், இனியா, ரித்விகா, உமா ரியாஸ் உட்பட பலர் நடித்துள்ளனர். சென்னை வடபழனியில் நடைபெற்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் அருண் பாண்டியன், "தமிழ்நாட்டில் தற்போது எல்லா மொழிப்படங்களும் கொடிகட்டி பறந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில் வந்த விஜய், அஜித் படமோ சினிமாவுக்கு செலவு பண்ணுறது கிடையாது. தனக்கு செலவு பண்ணுகிறார்கள்.

இவர்கள் 90 சதவீதம் சம்பளம் வாங்கினால் எப்படி படம் எடுக்க முடியும். கண்டிப்பாக எடுக்க முடியாது. இந்த மேடையை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக்கொண்டு வன்மையாக கண்டிக்கிறேன். நாங்க படம் எடுக்கும்போது, 10 சதவீதம்தான் சம்பளம். 90 சதவீதம் படத்துக்கு போகும். அப்படி இருந்தால்தான் நாம் வேற மொழி படங்களுடன் போட்டிப்பாேட முடியும்" என்று அதிரடியாக பேசினார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in