மீண்டும் மிரட்ட வருகிறது ’டிமான்ட்டி காலனி’ - அருள்நிதி நடிப்பில் அடுத்த பாகம்!

மீண்டும் மிரட்ட வருகிறது ’டிமான்ட்டி காலனி’ - அருள்நிதி நடிப்பில் அடுத்த பாகம்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி, ரமேஷ் திலக், சனத், எம்.எஸ்.பாஸ்கர் உட்பட பலர் நடித்து வெளியான படம், ’டிமான்ட்டி காலனி’. 2015-ல் வெளியான இந்தப் படம் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இதன் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் அஜய் ஞானமுத்து. இதையடுத்து ’இமைக்கா நொடிகள்’ படத்தை இயக்கிய இவர், இப்போது விக்ரம் நடித்துள்ள ’கோப்ரா’ படத்தை இயக்கியுள்ளார்.

இதற்கிடையே, அவர் ’டிமான்ட்டி காலனி’ படத்தின் அடுத்த பாகத்தை உருவாக்குகிறார். முதல் பாகம் வெளிவந்த 7-வது ஆண்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. கதை, திரைக்கதை, வசனம் எழுதி அஜய் ஞானமுத்து இப்படத்தைத் தயாரிக்கிறார். அவரிடம் இணை இயக்குநராகப் பணிபுரிந்த வெங்கி வேணுகோபால் இயக்குகிறார்.

அஜய் ஞானமுத்து
அஜய் ஞானமுத்து

இதுகுறித்து அஜய் ஞானமுத்து கூறும்போது, “டிமான்ட்டி காலனி எனக்குச் சிறப்பு வாய்ந்த படம். பல தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள் மற்றும் திரைத் துறை நண்பர்கள் இதன் இரண்டாம் பாகம் குறித்து ஆர்வத்துடன் கேட்டுக்கொண்டே இருந்தனர். அதற்கான கதை உருவானதும் அருள்நிதியை அணுகினோம். ​​அவருக்கும் திரைக்கதை பிடித்திருந்தது, உடனே இந்தப் படத்தை எடுக்க முடிவு செய்தோம்.

ஜூலையில் படப்பிடிப்பு தொடங்கும். ‘ஃபிரைடே தி தர்ட்டீன்த்’ (‘The Friday The 13th’), தி கஞ்சுரிங் யுனிவர்ஸ் (The Conjuring Universe) என்ற ஹாலிவுட் படங்களின் தொடர் வரிசைகள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதைப் போல இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்களை எடுக்கத் திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in