‘ஆர்டிகள் 15’ திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ‘நெஞ்சுக்கு நீதி’: உதயநிதி கதாபாத்திரத்தில் முக்கிய மாற்றம்

2019-ம் ஆண்டு பாலிவுட்டில் ஆயுஷ்மன் குராணா நடிப்பில் அனுபவ் சின்ஹா இயக்கத்தில் வெளியான ‘ஆர்டிகள் 15’ திரைப்படம் பெரும் வெற்றிபெற்றது. சாதிய வன்முறைகளைக் காத்திரமாகச் சாடியதால் இத்திரைப்படம் அனைத்துத்தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றது.

இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான தமிழ் ரீமேக் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகிவந்தது. தற்போது இத்திரைப்படத்திற்கு ‘நெஞ்சுக்கு நீதி’ என்று பெயரிடப்பட்டுள்ளது. கலைஞர் கருணாநிதி எழுதிய புகழ்பெற்ற நெஞ்சுக்கு நீதி புத்தகத்தின் தலைப்பையே திரைப்படத்திற்குத் தலைப்பாக வைத்திருப்பது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.

‘ஆர்டிகள் 15’ திரைப்படத்தில் கதாநாயகனான ஆயுஷ்மன் குராணா முன்னேறிய வகுப்பைச் சேர்ந்தவராக நடித்திருப்பார். ஆனால், ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தில் இவ்விஷயம் மாற்றப்பட்டிருக்கிறது என்று நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in