நடிகர் அஜித் சூட்டிங்கில் அதிர்ச்சி... கலை இயக்குநர் மாரடைப்பால் மரணம்!

அஜித்துடன் கலை இயக்குநர் மிலன்
அஜித்துடன் கலை இயக்குநர் மிலன்

நடிகர் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' சூட்டிங்கிற்காக அசர்பைஜான் சென்றிருந்த கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் பிரபல கலை இயக்குநரான சாபு சிரிலின் உதவியாளராக 1999-ம் ஆண்டு வாழ்க்கையைத் தொடங்கியவர் மிலன். இவர் 'சிட்டிசன்', 'தமிழன்', 'ரெட்', 'வில்லன்' மற்றும் 'அந்நியன்' உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார்.

கடந்த 2006-ம் ஆண்டு 'கலாப காதலன்' படத்தின் மூலம் மிலன் கலை இயக்குநராக அறிமுகமானார். 'பில்லா','ஏகன்', 'வேட்டைக்காரன்','வேலாயுதம்','வீரம்', 'வேதாளம்','விவேகம்',' சாமி 2' உள்பட 30-க்கும் மேற்பட்ட படங்களில் கலை இயக்குநராக மிலன் பணியாற்றியுள்ளார். மேலும் சக்தி மசாலா, சரவணா ஸ்டோர், ஆர்எம்கேவி, போத்தீஸ் உள்ளிட்ட 120-க்கும் மேற்பட்ட விளம்பரங்களுக்கு கலை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

மகிழ் திருமேனி இயக்கத்தில் நடிகர் அஜித் நடிக்கும் 'விடாமுயற்சி' படத்தில் கலை இயக்குநராக மிலன் தற்போது பணியாற்றி வந்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் நடந்து வந்தது. இந்த நிலையில் சூட்டிங் ஸ்பாட்டில் மிலனுக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனால், 'விடாமுயற்சி' திரைப்படக்குழு அதிர்ச்சியடைந்துள்ளது.

இதையும் வாசிக்கலாமே...

இன்று நவராத்திரி திருவிழா ஆரம்பம்... என்னென்ன விசேஷம்? எப்படி கொண்டாடுவது?!

கருணாநிதியின் ‘மூத்த பிள்ளை’க்கு வந்த சோதனை!

ஒரு சிக்ஸர் கூட அடிக்கலை… 20 ஓவரில் 427 ரன்கள் எடுத்து மகளிர் கிரிக்கெட் அணி உலக சாதனை!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்… மத்திய அரசின் கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்!

ஜீன்ஸ், லெக்கின்ஸ் போட்டு கோர்ட்டுக்கு வரக்கூடாது... வக்கீல்களுக்கு பார் கவுன்சில் கறார் உத்தரவு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in