திமிரில் பேசுவதா?... நடிகர் விஷாலை விளாசிய 'காதல்' சுகுமார்!

காதல் சுகுமார்
காதல் சுகுமார்

சிறிய பட்ஜெட் படங்கள் எடுக்க வேண்டாம் என கூறும் நடிகர் விஷால் பட வாய்ப்பு இல்லாமல் வீட்டில் இருக்கும் சிறிய கலைஞர்களுக்கு உணவளிப்பாரா என நடிகர் விஷாலை 'காதல்' சுகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

நடிகர் விஷால்
நடிகர் விஷால்

ஜெகநாதன் தயாரிப்பில் முத்து வீரா இயக்கத்தில் உருவாகி வரும் படம் "டப்பாங்குத்து'. முழுக்க முழுக்க நாட்டுப்புற கலைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக சங்கர பாண்டி மற்றும் தீப்தி துர்கா, 'காதல்' சுகுமார் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீடு விழாவில் பேசிய 'காதல்' சுகுமார், ‘’சிறு பட்ஜெட் படங்கள் தான் என்னை போன்ற கலைஞர்களை வாழ வைக்கிறது. எனவே. சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களை ஊக்குவிக்க வேண்டும். சமீபத்தில் விஷால் பேசியபோது ரூ. 3 கோடி ரூ.4 கோடி வைத்துக்கொண்டு படம் எடுக்க வராதீர்கள். அப்படி எடுக்கும் படங்கள் வெளியே வருவதில்லை என பேசினார்.

'திமிரு' படம் வெற்றிக்கு பிறகு பல ஆண்டுகள் கழித்து 'மார்க் ஆண்டனி' படம் இப்போது வெற்றி பெற்றுள்ளது. அதனால் திமிராக விஷால் பேசியுள்ளார்.விஷால் பேச்சைக் கேட்டு படம் எடுப்பதற்கு காத்திருந்த தயாரிப்பாளர்கள் ஐந்து பேர் பயந்து போய் எனக்கு தெரிந்து படம் எடுக்காமல் திரும்பிச் சென்று விட்டனர்.

எனவே, படம் எடுக்க வருபவர்களை ஊக்குவிக்காமல் படம் எடுக்க வரவேண்டாம் என்று விஷால் பேசுவது தவறு’’ என்றார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in