கிராமி விழாவில் மகனுடன் ஏ.ஆர்.ரகுமான் செல்ஃபி- வைரலாகும் போட்டோ!

கிராமி விழாவில் மகனுடன் ஏ.ஆர்.ரகுமான் செல்ஃபி- வைரலாகும் போட்டோ!
மகன் அமீனுடன் ஏ.ஆர்.ரகுமான் செல்ஃபி

கிராமி விருது வழங்கும் விழாவில் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தன் மகனுடன் கலந்துகொண்டார்.

கிராமி விருது விழா ஒவ்வொரு வருடம் நடந்து வருகிறது. 2022-ம் ஆண்டுக்கான 64-வது விருது வழங்கும் விழா, அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள எம்.ஜி.எம் கிராண்ட் கார்டன் அரேனாவில் கோலாகலமாக நடைபெற்றது. நிகழ்ச்சியை பிரபல காமெடியனும் நடிகருமான டிரெவோர் நோவா (Trevor Noah) தொகுத்து வழங்கினார்.

மகன் அமீனுடன் ஏ.ஆர்.ரகுமான்
மகன் அமீனுடன் ஏ.ஆர்.ரகுமான்

இந்த விருது விழாவில், ஏராளமான இசை கலைஞர்களும், இசை பிரபலங்களும் கலந்து கொண்டிருக்கின்றனர். வழக்கமாக ஜனவரி இறுதியில் நடத்தப்படும் இந்நிகழ்ச்சி, கரோனா காரணமாக இந்த ஆண்டு தாமதமாக நடத்தப்படுகிறது.

இந்நிலையில், இந்திய சினிமாவில் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரகுமான், இந்த விருதுகள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார். அவருடன் அவரது மகன் ஏ.ஆர்.அமீனும் பங்கேற்றுள்ளார். விருது விழாவில் மகனுடன் எடுத்த புகைப்படங்களை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார் ஏ.ஆர்.ரகுமான். ஒரு செல்ஃபி புகைப்படத்தையும் அவர் எடுத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

Related Stories

No stories found.