'நம்பிக்கைக்குரிய பெண் இயக்குநருடன் திணறுகிறேன்’: ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வீடியோ!

'நம்பிக்கைக்குரிய பெண் இயக்குநருடன் திணறுகிறேன்’: ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட வீடியோ!

'லால் சலாம்' படத்திற்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த்துடன் மெட்டு போடும் வீடியோவை ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ளார்.

நடிகர் ரஜினிகாந்தின் 171-வது படமான ‘லால் சலாம்’ படத்தை அவரது மகள் ஐஸ்வர்யா இயக்குகிறார். இந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இது குறித்த தகவல்கள் ஏற்கெனவே வெளியான நிலையில், 'லால் சலாம்' படத்தின் போஸ்டர்களும் வெளியாகின. ஸ்டம்ப், பேட், ஹெல்மட் ஆகியவை நெருப்பில் எறிவது போல போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் படம் கிரிக்கெட் விளையாட்டைப் பின்னணியாகக் கொண்டிருக்கும் என லைகா நிறுவனம் வெளியிட்ட போஸ்டர்கள் உறுதிப்படுத்துகின்றன.

விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடிக்கும் இந்தப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறார். மேலும் இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இதற்கான பணிகளை ஏ.ஆர். ரஹ்மான் மும்பையில் செய்து வருகிறார். ஏ.ஆர். ரஹ்மான் ஹார்மோனியப் பெட்டியில் இசைக்க, அவர் அருகில் அமர்ந்து ஐஸ்வர்யா ரஜினிகாந்த். ரசித்துக் கேட்பது போல வீடியோ ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும் "நம்பிக்கைக்குரிய பெண் இயக்குநருடன் 'லால்சலாம்' படத்திற்காக திணறுகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in