குடும்பத்துடன் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான்

குடும்பத்துடன் முதல்வரிடம் வாழ்த்துப் பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான்

சமீபத்தில் திருமணம் செய்துகொண்ட தனது மகள் மற்றும் குடும்பத்தினருடன் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று வாழ்த்துப் பெற்றார்.

ஆஸ்கர் விருது பெற்ற ’இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதிக்கு கதீஜா, ரெஹிமா என்ற மகள்களும் அமீன் என்ற மகனும் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் முகமது திருமண நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் மாதம் நடந்தது. இவர்கள் திருமணம் சமீபத்தில் சென்னையில் நடந்தது.

இதில் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்துகொண்டனர். மணமகன் யாஸ்தீன் ஷேக் ஆடியோ பொறியாளர். மகளின் திருமணப் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில், ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்திருந்தார். இதையடுத்து திரையுலகினரும் ரசிகர்களும் அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

இந்நிலையில், திருமணம் செய்துகொண்ட தனது மகள் கதீஜா, மருமகன் யாஸ்தீன் ஷேக் , தனது மனைவி சாய்ரா பானு, மகள் ரெஹிமா, மகன் அமீன் ஆகியோருடன் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், முதல்வர் மு.க.ஸ்டாலினை அவர் வீட்டில் இன்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.

இந்தச் சந்திப்பின்போது, நடிகரும் எம்.எல்.ஏவுமான உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின் ஆகியோர் உடன் இருந்தனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in