பிறந்தநாளில் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் அறிவிப்பு !

பிறந்தநாளில் டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் குறித்து ஏ.ஆர். ரஹ்மான் அறிவிப்பு !

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தன்னுடைய 56-வது பிறந்தநாளான இன்று புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் (KATRAAR) அறிமுகத்தை அறிவிக்கிறார்.

தமிழின் முன்னணி இசைக்கலைஞர்களில் ஒருவரான ஏ.ஆர். ரஹ்மான் இன்று தனது 56-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். திரையுலகைச் சேர்ந்தவர்களும் ரசிகர்களும் ரஹ்மானுக்கு தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். தன்னுடைய பிறந்தநாளை முன்னிட்டு ரஹ்மான் புதிய டிஜிட்டல் பிளாட்ஃபார்ம் கற்றார் அறிமுகத்தை அறிவிக்கிறார். இது ஒரு டிஜிட்டல் மியூசிக் மற்றும் பிற கலைகளின் பிளாட்ஃபார்ம் ஆகும். இது கலைஞர்கள் தங்கள் படைப்புகளை பட்டியலிடவும், ஈடுபடவும் மற்றும் பணமாக்கவும், அதாவது இசை, கலைகள் போன்றவற்றை நேரடியாக அவர்களின் பயனர்களுக்கு வழங்குகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் தனது பிரத்யேக படைப்புகளில் சிலவற்றை 'கற்றார்' தளம் மூலம் வெளியிடவுள்ளார்.
பல சர்வதேச தரத்திலான படைப்புகள் விரைவில் இந்த மேடையில் இருக்கும். HBAR அறக்கட்டளையுடன் இணைந்து இயங்குதளம் உருவாக்கப்படுகிறது மற்றும் ஹெடெரா நெட்வொர்க்கில் பயன்படுத்தப்படும்.

இதுமட்டுமல்லாமல், தன் பிறந்தநாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இன்று மாலை 6 மணிக்குக் தனது சமூகவலைதளத்தில் லைவ் மூலம் ரசிகர்களுடன் விர்ச்சுவலாக உரையாட இருக்கிறார் ரஹ்மான். சமீபத்தில் ரஹ்மான் நாகூர் தர்காவுக்கு ரஹ்மான் சென்றிருந்தார். இதற்கு முன்பு ஹைதராபாத்தில் உள்ள அமீன் தர்காவிற்கு ரஜினிகாந்த்துடன் சென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in