புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு அறுவை சிகிச்சை!

புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு அறுவை சிகிச்சை!

உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ள பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டுக்கு முழங்கையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது.

'டெர்மினேட்டர்' படங்களில் நடித்து உலக புகழ்பெற்ற நடிகர் அர்னால்டுக்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கடந்த 2019ம் ஆண்டு 'டெர்மினேட்டர் - டார்க் ஃபேட்' படத்தில் நடித்தார்.

அப்போது படப்பிடிப்பின் போது, அவருக்கு கை மற்றும் தோள் பட்டையில் காயங்கள் ஏற்பட்டன. படப்பிடிப்பு முடிந்து அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டிருந்த நிலையில், அது தள்ளிபோனது.

இதனிடையே அர்னால்டு, குங் பியூரி-2 என்ற படத்தில் மிகவும் ரிஸ்க் எடுத்து சண்டை காட்சிகளில் நடித்துள்ளார். அதன்பிறகு கையில் அறுவை சிகிச்சை செய்தே ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டதாக தெரிகிறது.

குங் பியூரி-2 படத்தின் ஷூட்டிங் முடிந்ததை அடுத்து,
அர்னால்டு முழங்கையில் அறுவை சிகிச்சை செய்து கொண்டுள்ளார். அவர் கையில் கட்டு போட்டுள்ள புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது.

விரைவில் நண்பர்களுடன் ஜிம்மில் விளையாட வருவேன், காத்திருங்கள் என்று அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அர்னால்டுக்கு ஏற்கனவே இதய அறுவை சிகிச்சை நடைபெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர் விரைவில் குணமடைய வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in