கார் விபத்தில் சிக்கிய பிரபல ஹாலிவுட் நடிகர்

அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்
அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர்

பிரபல ஹாலிவுட் ஆக்‌ஷன் ஹீரோ, அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர் கார் விபத்தில் சிக்கினார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் ஸ்வார்ஸ்னேக்கர். கலிபோர்னியா மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான இவர், லாஸ்ஏஞ்சல்ஸ் நகரின் புறநகர் பகுதியான பிரெண்ட்வுட்டில் வசித்து வருகிறார். இவர் வீட்டில் இருந்து தனது சொகுசு காரில் வெளியே சென்றுகொண்டிருந்தார்.

அங்கிருந்து அரை மைல் தூரத்தில் வந்தபோது இடதுபுறம் திரும்பினார் அர்னால்ட். ஆனால் சிக்னல் விழுவதற்கு முன்பே அவர் திரும்பியதால், எதிரேவந்த சிவப்பு நிற பியர்ஸ் கார் மீது எதிர்பாராதவிதமாக மோதினார். இந்த விபத்தில் பியர்ஸ் காரை ஓட்டிவந்த பெண் படுகாயம் அடைந்தார்.

இந்த விபத்தை நேரில் பார்த்த ஒருவர் கூறும்போது, ‘‘சினிமாவில் சண்டைக்காட்சியை பார்ப்பது போல இருந்தது. சிவப்பு நிற காரை ஓட்டிச் சென்ற பெண்ணின் தலையில் இருந்து ரத்தம் கொட்டிக்கொண்டிருந்தது. அவரை ஆம்புலன்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றது’’ என்றார்.

இந்த விபத்து அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in