`அர்ஜூன்தாஸூம் நானும் நண்பர்கள்தான்’- ஐஷ்வர்யா லட்சுமி விளக்கம்!

`அர்ஜூன்தாஸூம் நானும் நண்பர்கள்தான்’-  ஐஷ்வர்யா லட்சுமி விளக்கம்!

``அர்ஜுன்தாஸூம் நானும் நண்பர்கள்தான்'' என ஐஷ்வர்யா லட்சுமி விளக்கம் கொடுத்துள்ளார்.

‘ஜகமே தந்திரம்’ படம் மூலமாக தமிழில் நடிகையாக அறிமுகமான ஐஷ்வர்யா லட்சுமி 'பொன்னியின் செல்வன்’, ‘கட்டா குஸ்தி’ ஆகிய படங்கள் மூலம் நடிப்பால் கவனம் ஈர்த்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் நடிகர் அர்ஜுன்தாஸூடன் இருக்கும்படியான புகைப்படம் ஒன்றை தனது சமூகவலைதளப் பக்கத்தில் ஹார்ட்டின் எமோஜியுடன் பகிர்ந்திருந்தார். இதனை அடுத்து இருவரும் காதலிக்கிறார்களா என ரசிகர்களும் ஊடகங்களும் கேள்வி எழுப்பி வந்தனர். இது குறித்து இருவருமே மெளனமாக இருந்த நிலையில் தற்போது ஐஷ்வர்யா லட்சுமி விளக்கம் கொடுத்துள்ளார்.

அவர் கூறியிருப்பதாவது, ‘கடைசியாக நான் பதிவிட்ட புகைப்படம் பற்றி விளக்கம் கொடுக்கிறேன். இந்த அளவிற்கு அந்த புகைப்படம் வைரல் ஆகும் என எதிர்ப்பார்க்கவில்லை. அர்ஜுன்தாஸூம் நானும் தற்செயலாக சந்தித்தோம். நாங்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டதை எதேச்சையாக சமூகவலைதளத்தில் பதிவிட்டேன். மற்றபடி அதில் வேறு எதுவும் இல்லை. நாங்கள் நண்பர்கள்தான். எனக்கு நேற்றில் இருந்து தொடர்ச்சியாக மெசேஜ் அனுப்பிக் கொண்டே இருந்த அர்ஜுன்தாஸின் ரசிகைகளுக்கு அவர் எப்போதும் உங்களுக்குரியவர்தான்’ என தெரிவித்துள்ளார் ஐஷ்வர்யா லட்சுமி.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in