‘மாமன்னன்’ படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய மாரி செல்வராஜ்

‘மாமன்னன்’ படப்பிடிப்பில் பிறந்த நாள் கொண்டாடிய மாரி செல்வராஜ்

‘மாமன்னன்’ படப்பிடிப்பு தளத்தில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பிறந்த நாளை இன்று கொண்டாடினார்.

’பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படங்களை தொடர்ந்து மாரி செல்வராஜ், உதயநிதி ஸ்டாலின் நடிக்கும் படத்தை இயக்குகிறார். இந்தப் படத்திற்கு ’மாமன்னன்’ எனத் தலைப்பு வைத்துள்ளனர்.

இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலின் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். பகத் பாசில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்களுடன் வடிவேலுவும் இணைகிறார். உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்கிறார்.

ஈஸ்வரமூர்த்தி, உதயநிதி, மாரி செல்வராஜ், தேனி ஈஸ்வர்
ஈஸ்வரமூர்த்தி, உதயநிதி, மாரி செல்வராஜ், தேனி ஈஸ்வர்

இதன் ஷூட்டிங் சேலம் அருகே நடந்து வருகிறது. இதன் படப்பிடிப்பில் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது பிறந்த தினத்தை இன்று கொண்டாடினார். உதயநிதி ஸ்டாலின், ரெட் ஜெயண்ட் மூவிஸ் இணை தயாரிப்பாளர் எம்.செண்பகமூர்த்தி, ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் மற்றும் ‘மாமன்னன்’ படக்குழுவினர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in