லஷ்மி ராமகிருஷ்ணனின் 'ஆர் யூ ஓகே பேபி' - ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஆர் யூ ஓகே பேபி பட போஸட்ர்
ஆர் யூ ஓகே பேபி பட போஸட்ர்

லஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் சமுத்திரக்கனி மற்றும் அபிராமி முக்கிய வேடங்களில் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் 'ஆர் யூ ஓகே பேபி'. கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி திரையரங்குகளில் வெளியான இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. லஷ்மி ராமகிருஷ்ணன் தொகுத்து வழங்கிய சொல்வதெல்லாம் உண்மை என்ற ரியாலிட்டி ஷோ மூலம் கிடைத்த கதைக்கரு ஒன்றை அடிப்படையாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருந்தது.

இத்திரைப்படத்தில் சமுத்திரக்கனி, அபிராமி, முல்லை அரசி, மிஷ்கின், முருகா அசோக், ஆடுகளம் நரேன், அனுபமா குமார், பாவெல் நவகீதன், ரோபோ சங்கர், வினோதினி, லக்ஷ்மி ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார், கிருஷ்ணசேகர் ஒளிப்பதிவு செய்ய, சிஎஸ் பிரேம் குமார் எடிட் செய்திருந்தார். இந்நிலையில், வரும் அக்டோபர் 31ம் தேதி ஆஹா ஓடிடி தளத்தில் இத்திரைப்படம் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in