ஃபேஷன் டிசைனரை மணக்கிறார் பிரபல வில்லன் நடிகர்: லண்டனில் திருமணம்?

ஃபேஷன் டிசைனரை மணக்கிறார் பிரபல வில்லன் நடிகர்: லண்டனில் திருமணம்?

பிரபல நடிகர் வித்யூத் ஜம்வால் திருமணம், லண்டனில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

தமிழில் அஜித்தின் பில்லா 2, விஜய்யின் துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யூத் ஜம்வால். ’அஞ்சான்’ படத்தில் சூர்யாவின் நண்பனாக நடித்திருந்தார். பிரபல இந்தி ஆக்‌ஷன் ஹீரோவான இவர் நடித்து கடந்த 8-ம் தேதி வெளியான ’குதா ஹபிஸ் 2’ வரவேற்பை பெற்றுள்ளது.

இவரும் பிரபல ஃபேஷன் டிசைனர் நந்திதா மஹ்தானியும் காதலித்து வருகின்றனர். நந்திதா, கரீஷ்மா கபூரின் முன்னாள் கணவர் சஞ்சய் கபூரை மணந்து விவாகரத்து பெற்றவர்.

நந்திதாவும் வித்யூத்தும் கடந்த செப்டம்பர் மாதம் நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர். இந்நிலையில், இருவரும் இந்த மாதம் லண்டனில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாகவும் இதற்காக நந்திதா ஏற்கெனவே அங்கு சென்றுவிட்டதாகவும் வித்யூத் விரைவில் அங்கு செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையே அவர்கள் ஏற்கெனவே திருமணம் செய்துகொண்டதாகவும் தங்கள் திருமணத்தை இன்னும் 15 நாட்களில் அறிவிப்பார்கள் என்று பாலிவுட்டில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in