மோகன்லாலின் 'த்ரிஷயம் 3’: பரபரக்கும் புது தகவல்

மோகன்லாலின் 'த்ரிஷயம் 3’: பரபரக்கும் புது தகவல்

சூப்பர் ஹிட்டான ’த்ரிஷ்யம்’ படத்தின் மூன்றாம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

மோகன்லால், மீனா நடிப்பில் 2013-ம் ஆண்டு வெளியான மலையாளப் படம் ‘த்ரிஷ்யம்’. ஜீத்து ஜோசப் இயக்கிய இந்தப் படம் வரவேற்பைப் பெற்றதை அடுத்து, தமிழ் உள்பட பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தமிழில், கமல்ஹாசன் நடிப்பில் ‘பாபநாசம்’ என்ற பெயரில் உருவாகி வெற்றி பெற்றது.

இதன் இரண்டாம் பாகமான ‘த்ரிஷ்யம் 2’ நேரடியாக ஓடிடியில் வெளியாகி, நல்ல வரவேற்பைப் பெற்றது. முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பும் பரபரப்பும் இந்தப் படத்திலும் இருந்தால், ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், ’த்ரிஷ்யம் 3’ பாகம் பற்றி கடந்த சில மாதங்களாகவே பேசப்பட்டு வந்தது. அதற்கான கதை அமைந்தால் உருவாக்குவோம் என்று இயக்குநர் ஜீத்து ஜோசப் கூறியிருந்தார்.

இந்நிலையில், ’த்ரிஷ்யம் 3 ’ம் பாகம் உருவாக இருப்பதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் இதற்கான ஐடியாவை இயக்குநர் ஜீத்து ஜோசப், நடிகர் மோகன்லாலிடம் கூறியதாகவும், அது அவருக்குப் பிடித்திருந்ததால், உடனே ஒப்புக்கொண்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. இது பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in