பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி நிகழ்ச்சியை விட்டு விலகலா?: அமீர்- பாவ்னி விளக்கம்

பிக்பாஸ் ஜோடிகள் ரியாலிட்டி நிகழ்ச்சியை விட்டு விலகலா?: அமீர்- பாவ்னி விளக்கம்

பிக்பாஸ் ஜோடிகள் நடன நிகழ்ச்சியை விட்டு அமீர்- பாவ்னி விலக இருப்பதாக வந்த செய்திகளுக்கு இருவரும் விளக்கம் கொடுத்துள்ளனர்.

புகழ்பெற்ற ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் தமிழில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. ஐந்து சீசன்களை முடித்துள்ள இந்த நிகழ்ச்சி தனது ஆறாவது சீசனை அக்டோபர் மாதத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வெளியானது. இந்த பிக்பாஸ் சீசனில் கலந்து கொண்ட பிரபலங்களை வைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நடன ரியாலிட்டி நிகழ்ச்சியை தொடங்கியது விஜய் தொலைக்காட்சி. அந்த வகையில் கடந்த ஐந்தாவது சீசனில் கலந்து கொண்ட போட்டியாளர்களான பாவ்னி- அமீர் இந்த பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியில் தற்போது போட்டியாளர்களாக உள்ளனர்.

கடந்த வாரத்தில் நடந்த சுற்றில் பாவ்னி- அமீர் இருவருக்கும் திருமணம் நடக்கும்படியான ஒரு எபிசோட் நடந்தது. அது ரசிகர்கள் பலராலும் விரும்பப்பட்ட நிலையில் அதில் அமீர்- பாவ்னி இருவருக்கும் உடல்நிலை குறைவு காரணமாக அவர்கள் நிகழ்ச்சியை விட்டு விலகுகிறார்கள் எனவும் தகவல் வந்தது. இதனை தெளிவுப்படுத்தும் வகையில் அமீர்- பாவ்னி இருவரும் தங்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளனர்.

இது குறித்து பாவ்னி பகிர்ந்துள்ள பதிவில், ‘உங்களை போன்ற சிறந்த ஒரு மாஸ்டரை பெற்றதில் எனக்கு மகிழ்ச்சி. நான் மேடையில் பயம் இல்லாமல் நடனம் ஆடுவேன் என ஒரு நாளும் நினைத்து பார்த்தது இல்லை. அது நீங்கள் கற்று கொடுத்ததினாலும், தொடர்ச்சியான பயிற்சியினாலும் கிடைத்த ஒரு விஷயம். உங்களை தவிர வேறு யாராலும் எனக்கு இப்படி ஒரு சிறப்பான நடன பயிற்சியை கொடுத்திருக்க முடியுமா என தெரியவில்லை. உங்களிடம் இருந்து நிறைய விஷயங்கள் நான் கற்று கொண்டிருக்கிறேன்.

உங்கள் மூட்டுகளில் கடுமையான காயம் ஏற்பட்டது. இதற்காக வழக்கமான வேலையில் இருந்து விடுமுறை எடுக்கவும் அல்லது வீல் சேரில் அமர்ந்து கொண்டே நடனம் ஆடவும் சேனல் தரப்பில் சொன்னார்கள். ஆனால், அதை எல்லாம் தேர்ந்தெடுக்காமல் உங்கள் ரசிகர்களுக்காகவும் வேலையில் கொடுத்த கமிட்மென்டிற்காகவும் பாதியில் வெளியேற கூடாது என்பதற்காக இதை பொருட்படுத்தாமல் நடனம் ஆடினீர்கள். இது வேலை மீது உங்களுக்கு இருக்கும் மரியாதையை காட்டுகிறது.

உங்களுக்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால் கடைசியாக நம்முடைய நடனம் முன்பை போல சிறப்பான ஒன்றாக கொடுக்க முடியவில்லை. ஆனால், இனி வரும் நாட்களில் இன்னும் சிறப்பானதாக இருக்கும்’ என கூறியுள்ளார்.


அமீரும், ‘எனக்கு உடல்நிலை சரியில்லாததால் நிகழ்ச்சியை விட்டு விலக போகிறோம் என்ற வதந்தி பரவி வருகிறது. நிச்சயம் இதை விட்டு போகும் எண்ணம் இல்லை. இனி வரும் எபிசோட்டுகளில் எங்களது நடனத்திற்காக காத்திருங்கள்’ என தெளிவுப்படுத்தியுள்ளார் அமீர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in