12 நாளில் 10 கோடி வியூஸ்: அள்ளுது ’அரபிக் குத்து’

12 நாளில் 10 கோடி வியூஸ்: அள்ளுது ’அரபிக் குத்து’
பீஸ்ட் - விஜய், பூஜா ஹெக்டே

விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ படத்தின் அரபிக் குத்து பாடலை, 12 நாளில் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனைப் படைத்துள்ளது.

நடிகர் விஜய் இப்போது ’பீஸ்ட்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்தை, நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ளார். விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துள்ளார். யோகி பாபு, செல்வராகவன், ஷைன் டாம் ஜாக்கோ, ஜான் விஜய், அபர்னா தாஸ், ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்ட நிலையில், ஏப்ரல் 14 -ம் தேதி படம் வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் முதல் பாடலான ’அரபிக் குத்து’ காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது. பாடலை, நடிகர் சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார். இசை அமைப்பாளர் அனிருத்தும், ஜோனிதா காந்தியும் பாடியிருந்தனர்.

இந்தப் பாடல் வெளியான 16 மணி நேரத்தில் 18 மில்லியன் பார்வைகளையும் 2 மில்லியன் லைக்ஸ்களையும் பெற்று யூடியூபில் சாதனைப் படைத்திருந்தது. இந்நிலையில் 12 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை, அதாவது 10 கோடி பார்வைகளை கடந்து இந்தப் பாடல் சாதித்துள்ளது. இதற்கு முன் தனுஷின் ‘ரவுடி பேபி’ பாடல் 17 நாட்களில் 100 மில்லியன் பார்வைகளை கடந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.