நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்: இன்ஸ்டாவில் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ

ஏ.ஆர்.ரஹ்மானுடன், அமீன்.
ஏ.ஆர்.ரஹ்மானுடன், அமீன்.நூலிழையில் உயிர் தப்பிய ஏ.ஆர்.ரஹ்மானின் மகன்: இன்ஸ்டாவில் வெளியிட்ட அதிர்ச்சி போட்டோ

பாடல் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தில் நூலிழையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் உயிர் தப்பியுள்ளார். இதுதொடர்பான புகைப்படத்தை அவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர்.அமீன் இசைக்கலைஞராக மட்டுமின்றி பாடகராகவும் உள்ளார். 'ஓ காதல் கண்மனி', 'தில் பேச்சாரா' உள்ளிட்ட பல படங்களில் அவர் பாடியுள்ளார். அத்துடன் ஆல்பங்களையும் வெளியிட்டு வருகிறார். மேலும் தந்தை ஏ.ஆர்.ரஹ்மானுடன், நாடு முழுவதும் இசை நிகழ்ச்சிகளில் ஏ.ஆர். அமீன் கலந்து கொண்டு வருகிறார். இந்த நிலையில், அதிர்ச்சி தரும் தகவலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.அமீன் பகிர்ந்துள்ளார். அண்மையில் பாடலுக்காக நடத்தப்பட்ட படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்து குறித்த புகைப்படங்களை அவர் பகிர்ந்துள்ளார்.

இன்ஸ்டாவில் அமீன் வெளியிட்ட போட்டோ.
இன்ஸ்டாவில் அமீன் வெளியிட்ட போட்டோ.

இரண்டு தினங்களுக்கு முன்பு பாடல் படப்பிடிப்பு நடந்த போது அமீன் உள்ளிட்ட இசைக்கலைஞர்கள் கேமிரா முன் பாடுவதில் மும்மரமாக இருந்தனர். அப்போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ட்ரஸ் மற்றும் சரவிளக்குகள் திடீரென்று சரிந்து கீழே விழுந்தன. அப்போது அமீன் மற்றும் குழுவினர் சற்று தள்ளி நின்றதால் விபத்தில் சிக்காமல் தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள ஏ.ஆர்.அமீன்," இன்று பாதுகாப்பாகவும், உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், ஆன்மிக குருமார்களுக்கும் நன்றியைக் கூறிக்கொள்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in