`தம்பதியினரை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்'- மகளை வாழ்த்திய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

`தம்பதியினரை இறைவன் ஆசிர்வதிக்கட்டும்'- மகளை வாழ்த்திய இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்

இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகள் கதீஜா -ரியாஸ்தீன் ஷேக் அகமது திருமணம் எளிமையாக நடந்து முடிந்துள்ளது.

ஆஸ்கர் விருது பெற்ற ’இசைப் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான் - சாய்ரா பானு தம்பதிக்கு அமீன் என்ற மகனும், கதீஜா, ரெஹிமா என்ற மகள்களும் உள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மானின் மூத்த மகள் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் முகமது திருமண நிச்சயதார்த்தம் கடந்த டிசம்பர் மாதம் 29-ம் தேதி எளிய முறையில் நடந்தது. இதில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.

ரியாஸ்தீன் ஷேக் ஆடியோ பொறியாளர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கதீஜா - ரியாஸ்தீன் ஷேக் திருமணம் நேற்று எளிமையான முறையில் நடந்துள்ளது. மகளின் திருமணப் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்துள்ளார். ``எல்லா வல்ல இறைவன் தம்பதியினரை ஆசிர்வதிக்கட்டும். மணமக்களுக்கான உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் முன் கூட்டியே நன்றி'’ என்று அதில் தெரிவித்துள்ளார்.

ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்டுள்ள அந்தப் புகைப்படத்தில், மணமக்களுக்கு பின்னால், ஏ.ஆர்.ரஹ்மான், அவர் மனைவி சாய்ரா பானு, மகள் ரெஹிமா, மகன் அமீன் உள்ளனர். அருகில் ரஹ்மானின் அம்மா புகைப்படம் வைக்கப்பட்டுள்ளது.

இந்த புதுமண தம்பதிக்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in