பிரதமர் மோடியின் வீடியோவை ரீ-ட்விட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்: என்ன காரணம்?

பிரதமர் மோடியின் வீடியோவை ரீ-ட்விட் செய்த ஏ.ஆர்.ரஹ்மான்: என்ன காரணம்?

கார்கில் பகுதியில் தீபாவளியை ராணுவ வீரர்களுடன் கொண்டாடிய வீடியோ ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்விட் செய்துள்ளார் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான்.

தீபாவளியையொட்டி பிரதமர் நரேந்திர மோடி இன்று காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் உள்ள ராணுவ வீரர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவருடன் தீபாவளியை கொண்டாடிய பிரதமர் மோடி, அவர்களுக்கு இனிப்பு ஊட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அப்போது தமிழக வீரர்கள், பிரதமரை `சுராங்கனி' என்ற பாடலை பாடி வரவேற்றனர். இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி, "தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர்கள் இந்த அற்புதமான செயலால் நம்மை வியக்க வைத்தனர்" என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

அதே நேரத்தில் ராணுவ வீரர்களுடன் தீபாவளி கொண்டாடிய வீடியோவையும் பிரதமர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை தமிழகத்தைச் சேர்ந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ரீ-ட்விட் செய்துள்ளார். அதில், இதயம் இதயம் துடிக்கின்றதே, எங்கும் உன்போல் பாசம் இல்லை, ஆதலால் உன் மடி தேடினேன். தாய் மண்ணே வணக்கம்" என்று கூறியுள்ளார். இந்தப் பதிவு தற்போது வைரலாகியுள்ளது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in