ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவுக்கு விசிட் அடித்த இளையராஜா

ஏ.ஆர்.ரகுமான் ஸ்டூடியோவுக்கு விசிட் அடித்த இளையராஜா

துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் ஃபிர்டாஸ் ஸ்டூடியோவுக்கு இளையராஜா திடீர் விசிட் அடித்தார்.

துபாயில், ’எக்ஸ்போ 2020’ நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இங்கு வரும் ரசிகர்களுக்காக, இசை நிகழ்ச்சிகளும் நடத்தப்படுகின்றன. கடந்த மாதம் அனிருத் இசை நிகழ்ச்சி நடத்தினார். பின்னர் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சியும் நடந்தது. இந்நிலையில், கடந்த 5 ஆம் தேதி, இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் இளையராஜா பல்வேறு பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

நிகழ்ச்சி முடிந்ததும், துபாயில் உள்ள ஏ.ஆர்.ரகுமானின் ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு திடீர் விசிட் அடித்தார் இளையராஜா. அவருக்கு ஸ்டூடியோ முழுவதையும் சுற்றிக்காட்டினார் ரகுமான்.

பின்னர் அங்கு அவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள ரகுமான், ’மேஸ்ட்ரோ இளையராஜாவை ஃபிர்தோஸ் ஸ்டூடியோவுக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி. எதிர்காலத்தில் எங்கள் ஸ்டூடியோவில் அவர் இசையமைப்பார் என நம்புகிறேன்’ என குறிப்பிட்டுள்ளார். ஏ.ஆர்.ரகுமானின் இந்தப் பதிவு வைரலாகி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in