ஏ.ஆர்.ரகுமானின் ‘மூப்பில்லா தமிழே தாயே’: முதல்வர் பாராட்டு

ஏ.ஆர்.ரகுமானின் ‘மூப்பில்லா தமிழே தாயே’: முதல்வர் பாராட்டு

ஏ.ஆர்.ரகுமானின் ‘மூப்பில்லா தமிழே தாயே’ பாடலைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், “தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை” என அவருக்குப் பாராட்டு தெரிவித்துள்ளார்.

நான்கு நாட்கள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின், துபாய் சென்றுள்ளார். அவர் நேற்று மாலை துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் பங்கேற்றார். துபாய் வந்த அவரை, தனது ஸ்டூடியோவிற்கு வருமாறு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் அழைத்தார். அதை ஏற்று முதல்வர் ஸ்டாலின், தனது மனைவி, மகன் உதயநிதி ஸ்டாலின் மற்றும் குடும்பத்தினருடன் அவரது ஸ்டூடியோவிற்குச் சென்றார்.

முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஏ.ஆர்.ரகுமான்
முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஏ.ஆர்.ரகுமான்

தனது இசையில் உருவாகியுள்ள, ‘மூப்பில்லா தமிழே தாயே’ என்ற ஆல்பம் குறித்து கூறிய ஏ.ஆர்.ரகுமான், அதனை முதல்வர் ஸ்டாலினுக்குப் போட்டுக் காட்டியுள்ளார். அந்தப் பாடலைப் பார்த்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரைப் பாராட்டியுள்ளார். மேலும், ‘தமிழுக்கும் இசைக்கும் உலகில் எல்லை இல்லை’ என தனது ட்வீட்டர் பதிவில் பாராட்டு தெரிவித்துள்ளார்.

இந்தப் பாடலை தாமரை எழுதியுள்ளார். ஏ.ஆர்.ரகுமான், சைந்தவி, கதீஜா ரகுமான், ஏ.ஆர்.அமீன், அமினா ரஃபீக், காப்ரில்லா செலுச், பூவையார் ஆகியோர் பாடியுள்ளார். அமித் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். தமிழின் பெருமை போற்றும் இந்தப் பாடல், சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in