ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநர் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநர் படத்துக்கு இசையமைக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான்!

ஐக்கிய அரபு நாட்டின் முதல் பெண் இயக்குநராக உருவெடுத்து உள்ளவர் நாய்லா அல் காதிஜா. இவர் இயக்கிவரும் ’பாப்’ என்ற திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கவிருப்பதாக படக்குழு அறிவித்துள்ளது.

சமீபத்தில் துபாயில் நடந்த எக்ஸ்போ 2020 என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இயக்குநர் நாய்லா குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில், "இயக்குநர் நாய்லா ஒரு மிகச் சிறந்த இயக்குநர். அவர் இயக்கிய படத்தின் சில காட்சிகளை பார்த்து ஆச்சரியப்பட்டேன். அதனால் இந்த படத்திற்கு இசை அமைக்க ஒப்புக் கொண்டேன்" என்று கூறினார். இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகலாம் என்று கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in