ஐபிஎல் நிறைவு விழாவில் ஏ.ஆ.ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

ஐபிஎல் நிறைவு விழாவில் ஏ.ஆ.ரஹ்மான் இசை நிகழ்ச்சி!

ஐபிஎல் நிறைவு நிகழ்ச்சியில் தனது இசை நிகழ்ச்சி நடக்க இருப்பதாக ஏ.ஆர். ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

இந்த வருட ஐபிஎல் போட்டி, கடந்த மார்ச் 26-ம் தேதி தொடங்கியது. கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த இந்த தொடரின் இறுதிப்போட்டி, அகமதாபாத்தில் நாளை (29-05-22) நடக்கிறது. இதில் ஹர்திக் பாண்ட்யா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியும் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதுகின்றன. அகமதாபாத்தில் உள்ள நரேந்திரமோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்த இறுதிப் போட்டி நடக்கிறது.

இந்தப் போட்டிக்கு முன்பாக நிறைவு விழா நடக்கிறது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான் லைவ் இசை நிகழ்ச்சியை நடத்துகிறார். பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங், முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர்.

இதில் கலந்துகொள்வது குறித்து தனது சமூக வலைதள பக்கத்தில், இசை அமைப்பாளர் ஏ.ஆ.ரஹ்மான் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், 75-வது சுதந்திர விழாவை கொண்டாடும் வகையிலும் இந்திய கிரிக்கெட்டின் 80 வருட பயணத்தின் பெருமையை போற்றும் விதமாக நடக்கும் நிகழ்ச்சியில் என்னுடன் இணையுங்கள்; ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் நேரலையிலும் பார்க்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in