கவின் ஜோடியாக மலையாள நடிகை

அபர்ணா தாஸ்
அபர்ணா தாஸ்

கவின் ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்கிறார்.

ஒலிம்பியா மூவிஸ் எஸ்.அம்பேத் குமார் தயாரிக்கும் படத்தில் கவின் ஹீரோவாக நடிக்கிறார். இந்தப் படம் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் கணேஷ் கே.பாபு. இவர், ராஜேஷ் எம்.செல்வாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். இதில் மலையாள நடிகை அபர்ணா தாஸ் நாயகியாக நடிக்கிறார். இவர், இப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தில் நடித்து வருகிறார். மற்றும் 'முதல் நீ முடிவும் நீ' ஹரிஷ், புகழ், பிரதீப் ஆண்டனி உட்பட பலர் நடிக்கின்றனர். எழில்அரசு.கே ஒளிப்பதிவு செய்கிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார்.

கவின்
கவின்

படம் பற்றி தயாரிப்பாளர் அம்பேத் குமார் கூறும்போது, இன்றைய காலகட்ட, அதாவது நவீன காதல் கதையாக இந்தப் படம் இருக்கும். இளைஞர்களை மட்டுமல்ல, உலகளாவிய ரசிகர்களை கவரும் கதை இது. கவினின் நடிப்பு, இயக்குநர் கணேஷின் அற்புதமான திரைக்கதைக்கு மேலும் அழகூட்டும்’ என்கிறார். இன்னும் தலைப்பிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in