பாக்சிங் கற்கிறார் சூர்யா பட நாயகி

பாக்சிங் கற்கிறார் சூர்யா பட நாயகி

’சூரரைப் போற்று’ படத்தில் நடித்த அபர்ணா பாலமுரளி பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

தமிழில், 8 தோட்டாக்கள், சர்வம் தாள மயம், தீதும் நன்றும் படங்களில் நடித்தவர் அபர்ணா பாலமுரளி. சூர்யாவின் ’சூரரைப் போற்று’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமடைந்தார். அந்தப் படத்தின் பொம்மி கேரக்டர் அவரை, புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.

இப்போது அசோக் செல்வனுடன் ’நித்தம் ஒரு வானம்’, ஆர்.ஜே.பாலாஜியின் ’வீட்ல விசேஷங்க’ உட்பட நான்கைந்து படங்களில் நடித்து வருகிறார். இவர், பாக்சிங் கற்றுக்கொள்ளும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். பயிற்சியாளருடன் கடுமையாக மோதும் அந்த வீடியோ வேகமாக பரவி வருகிறது.

படத்துக்காக பாக்சிங் பயிற்சி பெறுகிறாரா, இல்லை உடற்பயிற்சிக்காக செய்கிறாரா என்பது தெரியவில்லை. நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, நானும் இதே போல செய்ய வேண்டும் என்றும் அந்த வீடியோவுக்கு கமென்ட் போட்டுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in