`திரைத்துறை பற்றி அதிகம் அறியாமலேயே சினிமாவுக்கு வந்தேன்’: தேசிய விருது பெற்ற அபர்ணா ஆச்சரியம்

`திரைத்துறை பற்றி அதிகம் அறியாமலேயே சினிமாவுக்கு வந்தேன்’: தேசிய விருது பெற்ற அபர்ணா ஆச்சரியம்

``தேசிய விருது கிடைத்தது எனக்கு ஆச்சரியத்தை அளித்தது'' என்று நடிகை அபர்ணா பாலமுரளி தெரிவித்தார்.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ திரைப்படத்துக்கு, சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, சிறந்த பின்னணி இசை என 5 விருதுகள் கிடைத்தன. இதையடுத்து விருது பெற்றவர்களுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் 'சூரரைப் போற்று' படத்தில் பொம்மியாக நடித்து ரசிகர்களை கவர்ந்த அபர்ணா பாலமுரளி, சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றது குறித்து கூறியதாவது:

Onmanorama

தேசிய விருது அறிவிப்பில் என் பெயரை பார்த்ததும் பேச்சே வரவில்லை. முதன்முறையாக புது விதமான அனுபவத்தை உணர்ந்தேன். இயக்குநர் சுதா கொங்கரா, என் கேரக்டருக்கு விருது கிடைக்கும் என்று எதிர்பார்த்தார். அந்த கேரக்டருக்கு ஏற்ப என்னை மாற்றிக்கொள்ள நேரம் கொடுத்தார். அதனால் அந்த கேரக்டரில் சிறப்பாக நடிக்க முடிந்தது.

திரைத்துறை பற்றி அதிகம் அறியாமலேயே சினிமாவுக்கு வந்தேன். அதனால் சினிமாவில் இன்னும் அதிகம் கற்றுக்கொள்ளவும் நடிக்க வாய்ப்புள்ள சிறந்த கேரக்டரில் நடிக்கவும் ஆசைப்படுகிறேன். மதுரை வழக்கில் பேசி நடிக்க பலர் உதவி செய்திருக்கிறார்கள். நடிகர் சூர்யா, இயக்குநர் சுதா, இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ்குமார் உட்பட படக்குழுவுக்கு நன்றி.

இவ்வாறு அபர்ணா பாலமுரளி தெரிவித்துள்ளார்.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in