தேசிய விருது பெற்ற 'பொம்மி’க்கு கிடைத்த சூப்பர் ஸ்டார் படம்!

தேசிய விருது பெற்ற 'பொம்மி’க்கு கிடைத்த சூப்பர்  ஸ்டார் படம்!

தேசிய விருது பெற்ற ’சூரரைப் போற்று’ பொம்மிக்கு அடுத்த அதிர்ஷ்ட வாய்ப்புக் கிடைத்துள்ளது.

68-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. இதில் ’சூரரைப் போற்று’, சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை, திரைக்கதை, பின்னணி இசை என ஐந்து விருதுகளைப் பெற்றது. இந்தப் படத்தில் ’பொம்மி’ என்ற கேரக்டரில் பிரமாதமாக நடித்திருந்தார் அபர்ணா பாலமுரளி.

தேசிய விருது கிடைத்ததை அடுத்து, பிரபல மலையாள சூப்பர் ஸ்டார் பிருத்விராஜ் படத்தில் நடிக்கும் வாய்ப்பும் கிடைத்துள்ளது.

பிருத்விராஜ் நடிப்பில் உருவாகும் மலையாள படம் ’காப்பா’. கேங்ஸ்டர் கதையைக் கொண்ட இந்தப் படத்தில் ஆசிப் அலி, அன்னா பென், திலீஷ் போத்தன், ஜெகதீஷ் உட்பட பலர் நடிக்கின்றனர். ஷாஜி கைலாஷ் இயக்கி வருகிறார்.

இதன் படப்பிடிப்பு கடந்த வாரம் திருவனந்தபுரத்தில் தொடங்கியது. இந்தப் படத்தில் முக்கிய கேரக்டரில் நடிகை மஞ்சு வாரியர் நடிக்க இருந்தார். அவர் ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் ’ஏகே 61’ படத்துக்கு செல்ல வேண்டியிருப்பதால் கால்ஷீட் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் 'காப்பா' படத்தில் இருந்து விலகினார்.

இந்நிலையில், அவர் நடிக்க வேண்டிய கேரக்டர் அபர்ணா பாலமுரளிக்கு கிடைத்துள்ளது. இதில் அவர் கேரக்டருக்கு முக்கியத்துவம் உள்ளது என்று படக்குழு தெரிவித்துள்ளது. தேசிய விருது கிடைத்த மறுநாளே, மலையாள முன்னணி ஹீரோ படத்தில் வாய்ப்பு கிடைத்திருப்பது அவருடைய அதிர்ஷ்டம் என்கிறார்கள் மலையாள ரசிகர்கள்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in