காஜல் இல்லாத `ஆச்சார்யா’வில் அனுஷ்கா... ஆனால், சஸ்பென்சாம்

காஜல் இல்லாத `ஆச்சார்யா’வில் அனுஷ்கா... ஆனால், சஸ்பென்சாம்

சிரஞ்சீவியின் ’ஆச்சார்யா’ படத்தில் நடிகை அனுஷ்கா ஷெட்டி, ஒரு பாடலுக்கு ஆடியுள்ளதாகக் கூறப்படுகிறது.

சிரஞ்சீவி நடிப்பில் பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகியுள்ள தெலுங்கு படம், ’ஆச்சார்யா’. கொரட்டலா சிவா இயக்கியுள்ள இந்தப் படத்தில் ராம் சரண் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். பூஜா ஹெக்டே, சோனு சூட், கிஷோர் உட்பட பலர் நடித்துள்ளனர். திரு ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு மணிசர்மா இசை அமைத்துள்ளார்.

இந்தப் படத்தில், சிரஞ்சீவி ஜோடியாக காஜல் அகர்வால் நடித்திருந்தார். அவர் நடித்த காட்சிகளை திடீரென நீக்கியுள்ளனர். இதை இயக்குநர் கொரட்டலா சிவா உறுதிப்படுத்தினார். ’’காஜல் தொடர்பான காட்சிகளை படமாக்கிவிட்டு ரஷ் பார்த்தபோது ஒரு முன்னணி நடிகையை, சின்ன கேரக்டரில் நடிக்க வைப்பது சரியல்ல என்று தோன்றியது. இதுபற்றி காஜலிடமும் பேசினோம். பிறகு அவர் தொடர்பான காட்சிகளை நீக்கிவிட்டோம். ஆனாலும் ஒரு பாடல் காட்சியில் அவர் வருவார்'' என்றார்.

இந்நிலையில் இந்தப் படத்தில் அனுஷ்கா ஷெட்டி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். அவர் ஒரு பாடல் காட்சியிலும் ஆடியுள்ளார். இதை படக்குழு சஸ்பென்சாக வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in