‘அருந்ததி’ வெளியாகி 13 ஆண்டுகள்: அனுஷ்கா நெகிழ்ச்சி

அனுஷ்கா
அனுஷ்கா

‘எந்த நடிகைக்கும் வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் கேரக்டர்தான் அருந்ததி படத்தில் தனக்கு கிடைத்தது’ என்று நடிகை அனுஷ்கா தெரிவித்துள்ளார்.

அனுஷ்கா நாயகியாக நடித்து 2009-ம் ஆண்டு, ஜனவரி 16-ம் தேதி வெளியான சூப்பர் ஹிட் தெலுங்கு படம், ’அருந்ததி’. சோனு சூட் கொடூர வில்லனாக நடித்திருந்தார். தீபக், ஷாயாஜி ஷிண்டே, மனோரமா, சுபாஷினி உட்பட பலர் நடித்திருந்தனர். கே.கே.செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்தை கோடி ராமகிருஷ்ணா இயக்கி இருந்தார். ஷ்யாம் பிரசாத் ரெட்டி தயாரித்திருந்தார்.

அனுஷ்கா
அனுஷ்கா

இந்தப் படம், தமிழிலும் அதே பெயரில் டப் செய்யப்பட்டு பிரமாண்டமாக வெளியானது. தமிழிலும் யாரும் எதிர்பாராத வெற்றியை இந்தப் படம் பெற்றது. மலையாளம், இந்தி, கன்னடம் உட்பட மேலும் சில மொழிகளில் டப் செய்யப்பட்டு வெற்றிபெற்றது. அனுஷ்காவை அடுத்தகட்டத்துக்குக் கொண்டுசென்ற படம் இது. ’அருந்ததி’க்குப் பிறகு அனுஷ்காவுக்கு தமிழ், தெலுங்கில் அதிக வாய்ப்புகள் குவிந்தன.

இந்தப் படம் வெளியாகி 13 ஆண்டுகள் ஆனதை ஒட்டி நடிகை அனுஷ்கா, தனது இன்ஸ்டாகிராமில் நினைவு கூர்ந்துள்ளார். அதில், ’‘அருந்ததி’ வெளியாகி 13 வருடங்கள்! எந்த நடிகைக்கும் வாழ்நாளில் ஒருமுறை கிடைக்கும் ஒரு கதாபாத்திரமாக ஜக்கம்மா எனக்கு கிடைத்தது. நான் உண்மையிலேயே ஆசிர்வதிக்கப்பட்டவள். கோடி ராமகிருஷ்ணா, ஷ்யாம் பிரசாத் ரெட்டி உட்பட மொத்த படக்குழுவுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி. இந்தப் படம் எப்போதும் என் மனதுக்கு நெருக்கமாகவே இருக்கும்’’ என்று கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in