பிரபல பாடகியின் பயோபிக்கில் அனுஷ்கா?

பிரபல பாடகியின் பயோபிக்கில் அனுஷ்கா?

பிரபல கர்நாடக இசைப் பாடகியின் பயோபிக்கில் நடிகை அனுஷ்கா ஷெட்டி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

பிரபல கர்நாடக இசைப் பாடகி, பெங்களூரு நாகரத்னம்மாவின் வாழ்க்கை கதை சினிமாவாகிறது. இவர், மெட்ராஸ் மாகாண தேவதாசிகள் சங்கத்தின் முதல் தலைவராக இருந்தவர். திருவையாறில் தியாகராஜர் சமாதியின் மீது கோயில் எழுப்பியவர். தியாகராசர் ஆராதனை விழாவில் பெண்களும் சமமாகப் பங்குபெற வழிசெய்தவர். இவரது மூதாதையர்கள் மைசூர் அரசவையில் பாடகர்களாகவும் இசைக்கலைஞர்களாகவும் பணியாற்றியவர்கள்.

அனுஷ்கா ஷெட்டி
அனுஷ்கா ஷெட்டி

இவரது வாழ்க்கை கதையை, இயக்குநர் சிங்கிதம் சீனிவாச ராவ், சினிமாவாக இயக்குகிறார். பிரபல தெலுங்கு இயக்குநரான இவர், கமல்ஹாசனின், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன், மகளிர் மட்டும், காதலா காதலா உட்பட பல படங்களை இயக்கி இருக்கிறார்.

இந்தப் படத்தில் நடிக்க சமந்தாவிடம் பேசி வந்தனர். அவர் நடிக்க சம்மதித்ததாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிக்கவில்லை என்றும் அவருக்குப் பதில் நடிகை அனுஷ்கா ஷெட்டியிடம் பேசி வருவதாகவும் கூறப்படுகிறது. தமிழ், தெலுங்கு, கன்னடத்தில் இந்தப் படம் உருவாக இருக்கிறது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in