5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா

5 ஆண்டுகளுக்கு பிறகு தமிழ் படத்தில் நடிக்கிறார் அனுஷ்கா

கோலிவுட்டில் `இரண்டு' படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா, வேட்டைக்காரன், என்னை அறிந்தால், சிங்கம், லிங்கா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் சூப்பர் ஹிட் படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். ‘பாகுபலி’ படத்திற்கு பிறகு பஞ்சமுகி, அருந்ததி உள்ளிட்ட திரைப்படங்கள் பெரிய அளவில் பேசப்பட்டார் அனுஷ்கா. ஆனால், கடந்த 5 ஆண்டுகளாக தமிழில் நடிக்கவில்லை.

இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் மீண்டும் அனுஷ்கா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே ஏ.எல்.விஜய் இயக்கத்தில் `ருத்ரதாண்டவன்' மற்றும் `தெய்வ திருமகள்' ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். இதையடுத்து தற்போது மூன்றாவது முறையாக ஏ.எல்.விஜய் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

Related Stories

No stories found.