2 வருடத்துக்குப் பிறகு மீண்டும் அனுஷ்கா!

2 வருடத்துக்குப் பிறகு மீண்டும் அனுஷ்கா!

நடிகை அனுஷ்கா ஷெட்டி இரண்டு வருடத்துக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருந்த அனுஷ்கா, கடைசியாக ’நிசப்தம்’ படத்தில் நடித்திருந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படம் ஓடிடியில் கடந்த 2020-ம் ஆண்டு வெளியானது. இதையடுத்து படங்களில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா, இப்போது மீண்டும் நடிக்க வருகிறார்.

தெலுங்கு இயக்குநர் மாருதி இயக்க உள்ள ’ராஜா டீலக்ஸ்’ படத்தில் பிரபாஸ் ஜோடியாக நடிக்கிறார் என்று கூறப்படுகிறது. இருவருக்குமான கெமிஸ்ட்ரி பேசப்படும் நிலையில், அவர்கள் மீண்டும் இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இதற்கிடையே மற்றொரு படத்திலும் அனுஷ்கா நடிக்க இருக்கிறார். இதில், ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா, ஜதி ரத்னலு ஆகிய படங்களில் நடித்த நவீன் பொலிஷெட்டி ஹீரோவாக நடிக்கிறார். யுவி கிரியேஷன்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் 40 வயது பெண்ணாகவே அனுஷ்கா நடிக்க இருக்கிறார். படத்தை மகேஷ் பாபு பி இயக்குகிறார். பான் இந்தியா படமாக இது உருவாகிறது.

Related Stories

No stories found.