சுந்தர்.சிக்கு வில்லனாகும் இந்தி இயக்குநர்!

சுந்தர்.சிக்கு வில்லனாகும் இந்தி இயக்குநர்!

சுந்தர் சி கதாநாயகனாக நடிக்கும் புதியப் படத்தில், பாலிவுட் இயக்குநர் அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார்.

த்ரிஷா நடிப்பில் ஓடிடியில் வெளியான படம், ’பரமபதம் விளையாட்டு’, இந்தப் படத்தின் இயக்குநர் திருஞானம் அடுத்து இயக்கும் படத்தில் சுந்தர் சி நாயகனாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கு ‘ஒன் 2 ஒன்’ என்று டைட்டில் வைத்துள்ளனர். இதில் சுந்தர் சி ஜோடியாக ராகினி திவேதி நடிக்கிறார். இந்தி திரைப்பட இயக்குநரும், நடிகருமான அனுராக் காஷ்யப் வில்லனாக நடிக்கிறார்.

அனுராக் காஷ்யப், குஷ்பு, சுந்தர்.சி
அனுராக் காஷ்யப், குஷ்பு, சுந்தர்.சி

இதற்காக சென்னை வந்துள்ள அவர், சுந்தர்.சி., அவர் மனைவி குஷ்பு ஆகியோரை சந்தித்தார். இத்தகவலை ட்விட்டர் பக்கத்தில் குஷ்பு பகிர்ந்துள்ளார். தமிழில், அஜய் ஞானமுத்து இயக்கிய ’இமைக்கா நொடிகள்’ படத்தில், அனுராக் காஷ்யப் ஏற்கனவே வில்லனாக நடித்திருக்கிறார்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழில் மீண்டும் ரீ என்ட்ரி ஆகிறார். படத்தில், ஹீரோவுக்கு இணையாக பவர்புல் வேடம் வில்லனுக்கு என்பதால் அனுராக் காஷ்யபை நடிக்க வைத்துள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.