நடிகர் அஜித் மகளுக்கு 16வது பிறந்த நாள்: ஷாலினி பகிர்ந்த க்யூட் புகைப்படம்!

தனது குடும்பத்தினருடன் நடிகர் அஜித்.
தனது குடும்பத்தினருடன் நடிகர் அஜித்.

தனது மகள் அனோஷ்கா பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்லி ஷாலினி அஜித் க்யூட்டான குடும்பப் புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.

மகளுடன் ஷாலினி
மகளுடன் ஷாலினி

அஜித்- ஷாலினிக்கு கடந்த 2000-ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் கழித்தே மகள் அனோஷ்கா பிறந்தார். அதன் பிறகு மகன் ஆத்விக். நேற்று அனோஷ்காவுக்கு 16வது பிறந்தநாள். இதையொட்டி, குடும்பத்துடன் பிறந்தநாள் கொண்டாடி உள்ளார். இந்தப் புகைப்படத்தை ஷாலினி அஜித் தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்து, ‘பிறந்தநாள் வாழ்த்துகள் பேபி’ என அன்போடு தன் மகளுக்கு வாழ்த்துக் கூறியுள்ளார்.

குடும்பத்துடன் அஜித்...
குடும்பத்துடன் அஜித்...

இந்தப் புகைப்படத்தில் ஆத்விக், அனோஷ்காவுக்கு கேக் ஊட்டி விட, அதை ஷாலினியும் அஜித்தும் அன்போடு பார்க்கிறார்கள். அனோஷ்காவுக்கு ரசிகர்களும் தங்களது பிறந்தநாள் வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

நடிகர் அஜித், தற்போது ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு முழுவதும் அஜர்பைஜானில் நடக்க, பிரேக் கிடைக்கும் போதெல்லாம் துபாயில் தன் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார். சமீபத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அவர் குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வீடியோக்கள் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிக்கலாமே...

காணொலி காட்சி வாயிலாக ஆஜரான செந்தில் பாலாஜி: 14வது முறையாக நீதிமன்ற காவல் நீட்டிப்பு!

நடிகர் விஜய் மீது செருப்பு வீசிய சம்பவம்: போலீஸில் பரபரப்பு புகார்!

‘இரண்டு வருடமாக நீடிக்கும் விசாரணையில், தேர்தல் நெருக்கத்தில் சம்மன் அனுப்புவது ஏன்?’ கேஜ்ரிவால் கேள்வி

கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம்... தமிழக அரசு 20 கோடி ரூபாய் ஒதுக்கீடு!

தமிழகத்தில் மதுவால் கொலை அதிகரிக்கிறது... திமுக அரசு மீது அண்ணாமலை குற்றச்சாட்டு!

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in