'ஜெயிலர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்குப் பதில் களமிறங்கும் பிரபல நடிகர்!

'ஜெயிலர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்குப் பதில் களமிறங்கும் பிரபல நடிகர்!

நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு பதிலாக வேறொரு நடிகர் களம் இறங்க இருக்கிறார்.

‘பீஸ்ட்’ படத்திற்கு பிறகு நெல்சன் திலீப் குமார் இயக்கும் திரைப்படம் ‘ஜெயிலர்’. நடிகர் ரஜினிகாந்த் முதல் முறையாக நெல்சன் திலீப்குமாருடன் இணைகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தினை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இதில் நடிகர் ரஜினிக்கு ஜோடியாக ஐஷ்வர்யா ராய் நடிக்கிறார். மேலும் ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லே உள்ளிட்ட பல நடிகர்கள் நடிக்கின்றனர்.

இதன் படப்பிடிப்பு சமீபத்தில் சென்னையில் தொடங்கி ஆரம்பத்தில் சண்டை காட்சிகள் படமக்கப்பட்டு வருகிறது. படம் ஆரம்பிக்கும் போதே இதில் நடிகர் சிவகார்த்திகேயன் சிறப்பு தோற்றத்தில் நடிக்க அதிக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், தற்போது சிவகார்த்திகேயனுக்குப் பதிலாக நடிகர் ஜெய் இந்த சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருக்கிறார். ஏற்கெனவே நடிகை தமன்னா ‘ஜெயிலர்’ படத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தமன்னாவுக்கு ஜோடியாகவே நடிகர் ஜெய் நடிக்க உள்ளார்.

இதுகுறித்து படக்குழு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கலாம். ஏற்கெனவே, நெல்சன் திலீப்குமார் இயக்கி பாதியில் நின்று போன சிம்புவின் ‘வேட்டை மன்னன்’ படத்தில் நடிகர் ஜெய் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending Stories...

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in