`சலீம்’ இயக்குநரின் அடுத்தப் பட டைட்டில் அறிவிப்பு!

`சலீம்’ இயக்குநரின் அடுத்தப் பட டைட்டில் அறிவிப்பு!
இயக்குநர் என்.வி.நிர்மல்குமார, தயாரிப்பாளர் எஸ்.தாணு

சலீம் இயக்குநரின் அடுத்தப் பட டைட்டிலை இயக்குநர் கலைப்புலி எஸ். தாணு வெளியிட்டார்.

விஜய் ஆண்டனி நடித்த ’சலீம்’ படத்தை இயக்கியவர் என்.வி.நிர்மல் குமார். பின்னர் தெலுங்கில் ’மிஸ்மேட்ச்’ என்ற படத்தை இயக்கினார். அடுத்து, அரவிந்த் சாமி, த்ரிஷா நடித்த ’சதுரங்கவேட்டை 2’ படத்தை இயக்கினார். இந்தப் படம் வெளியாகவில்லை. இப்போது சசிகுமார், சரத்குமார் நடிக்கும் ’நா நா’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.

இதற்கிடையே அவர் அடுத்து இயக்கும் படத்துக்கு ’அல்லா மாலிக்’ என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை வி ட்ரீம் ஒர்க்ஸ் தயாரிக்கிறது. கணேஷ் சந்திரா, ரமேஷ் பி ஒளிப்பதிவு செய்கின்றனர். கவாஸ்கர் அவினாஷ் இசை அமைக்கிறார். இந்தப் படத்தின் டைட்டில் டீசரை, தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு வெளியிட்டார்.

இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை படக்குழு விரைவில் அறிவிக்க இருக்கிறது.

Related Stories

No stories found.