’அண்ணனைத் தாலாட்டும் அன்னைமடி நீ’: வெளியானது ’மாறன்’ 2-வது பாடல்

’அண்ணனைத் தாலாட்டும் அன்னைமடி நீ’: வெளியானது ’மாறன்’ 2-வது பாடல்

தனுஷ் நடித்துள்ள ’மாறன்’ படத்தின் இரண்டாவது பாடல், இன்று வெளியாகியுள்ளது.

நடிகர் தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரகனி, அமீர், ஸ்மிருதி வெங்கட், மாஸ்டர் மகேந்திரன் உட்பட பலர் நடித்துள்ள படம், ’மாறன்’. கார்த்திக் நரேன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஜி.வி.பிரகாஷ் இசை அமைத்துள்ள இந்தப் படம், டிஸ்னி ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாறன் - தனுஷ், மாளவிகா
மாறன் - தனுஷ், மாளவிகா

இந்தப் படத்தின் முதல் பாடல் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படத்தின் அடுத்தப் பாடல் இன்று வெளியாகி இருக்கிறது. இதை, இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அண்ணன் -தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் பாடலை, அனுராக் குல்கர்னி பாடியுள்ளார். விவேக் எழுதியுள்ளார். "அண்ணனைத் தாலாட்டும் அன்னைமடி நீ" என்று தொடங்கும் இந்தப் பாடல் வைரலாகி வருகிறது.

தனுஷ் நடிப்பில் அடுத்து, ‘திருச்சிற்றம்பலம்’ வெளியாக இருக்கிறது. ’வாத்தி’, ’நானே வருவேன் படங்களில் அவர் நடித்து வருகிறார்.

Related Stories

No stories found.