நடிகை சமந்தா ஸ்டைலுக்கு மாறிய அஞ்சலி!

நடிகை சமந்தா ஸ்டைலுக்கு மாறிய அஞ்சலி!

சமந்தா ஸ்டைலில் நடிகை அஞ்சலியும் கவர்ச்சியாக ஆட களம் இறங்கி இருக்கிறார்.

ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு ஆடுவது புதிதல்ல. தெலுங்கு சினிமாவில் ஹீரோயின்கள் ஒரு பாடலுக்கு ஆடுவது அதிகரித்து வருகிறது. சம்ந்தா 'புஷ்பா' படத்தில் 'ஊ சொல்றியா மாமா' பாடலுக்கு ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். நடிகை தமன்னா, 'வருண் தேஜின் கானி' என்ற படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். ரெஜினா, சிரஞ்சீவியின் 'ஆச்சார்யா' படத்திலும் நடிகை பூஜா ஹெக்டே 'எஃப் 3' படத்திலும் ஆடியிருந்தனர்.

இந்நிலையில் நடிகை அஞ்சலியும் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடுவதற்கு களம் இறங்கி இருக்கிறார். அவர் தமிழில் ஏற்கனவே ’சிங்கம் 2’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியிருந்தார். சில தெலுங்கு படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். ஆனால், இப்போது கவர்ச்சியாக ஆடுவதாகக் கூறப்படுகிறது.

பிரபல தெலுங்கு நடிகர் நிதின் நடிப்பில் உருவாகி வரும் படம், ‘மச்சேர்லா நியோஜகவர்கம்’. இந்தப் படத்தில் அஞ்சலி கவர்ச்சி நடனம் ஆடி உள்ளார். இதற்காக அவருக்கு அதிக சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தப் படத்தின் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கவர்ச்சியான உடை அணிந்தபடி போஸ் கொடுத்துள்ளார் அஞ்சலி. இந்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் 'RC 15' படத்தில் முக்கிய வேடத்தில் அஞ்சலி நடித்து வருகிறார்.'ஜான்சி' என்கிற வெப் தொடரில் நாயகியாக நடித்து வரும் அவர் தமிழில் ராம் இயக்கத்தில் நிவின் பாலி ஜோடியாக பெயரிடப்படாதப் படத்தில் நடித்துள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in