‘அது ஸ்பெஷல் பாட்டு’ - மூட்டு வலியுடன் நடனமாடிய அஞ்சலி

‘அது ஸ்பெஷல் பாட்டு’ - மூட்டு வலியுடன் நடனமாடிய அஞ்சலி

ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் ஹீரோவாக நடிக்கும் 'ஆர்சி 15' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் நடிகை அஞ்சலி. ராம் இயக்கத்தில் நிவின் பாலி ஜோடியாக, பெயரிடப்படாத படத்திலும் நடித்துள்ளார். இந்நிலையில், தெலுங்கு படமான ’மச்சேர்லா நியோஜகவர்கம்’ என்ற படத்தில் கவர்ச்சியாக ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். நிதின் நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில், கீர்த்தி ஷெட்டி அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.

தமிழில் ஏற்கெனவே ’சிங்கம் 2’ படத்தில் ஒரு பாடலுக்கு அஞ்சலி நடனம் ஆடியிருந்தார். சில தெலுங்கு படங்களிலும் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இந்நிலையில் ‘மச்சேர்லா நியோஜகவர்கம்’ படத்தின் பாடலுக்கும் அவர் ஆடியுள்ளார். இதன் லிரிக்கல் வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

கடும் மூட்டுவலியுடன் இந்தப் பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் அஞ்சலி. இதை நடிகர் நிதின் தெரிவித்துள்ளார். “முதன்முறையாக அஞ்சலியுடன் ஆடியுள்ளேன். அஞ்சலி சிறப்பாக நடனம் ஆடியிருக்கிறார். மூட்டு வலி இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாமல் அவர் ஆடியது ஆச்சரியமளித்தது. இந்தப் பாடல் பெரிய ஹிட்டாகும்’’ என்று அவர் கூறினார்.

நடிகை அஞ்சலி கூறும்போது, ’’இது எனக்கு ஸ்பெஷலான பாடல். நிதினுடன் ஆடுவதற்கு கஷ்டமாக இருந்தது. அவர் வேகமாக நடனம் ஆடுபவர். இந்தப் பாடலின் லிரிக்கல் வீடியோ வரவேற்பை பெற்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது’’ என்றார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in