பாலிவுட்டில்அறிமுகமாகும் அனிருத்

அனிருத்
அனிருத்படம். பு.க.பிரவீன்

அனிருத் இசையமைத்திருக்கும் ‘டாக்டர்’ திரைப்படம், தற்போது வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுவருகிறது. தற்போது, ‘இந்தியன்-2’, ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’, ‘டான்’, ‘பீஸ்ட்’ போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துவருகிறார் அனிருத். தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பட உலகில் பிரபலமான இசையமைப்பாளராக வலம்வரும் அனிருத், விரைவில் ஹிந்தியிலும் அறிமுகமாகவுள்ளார். தெலுங்கில், கடந்த 2019-ம் ஆண்டு நானி நடிப்பில் வெளியான 'ஜெர்ஸி' திரைப்படத்துக்கு அனிருத் இசையமைத்தார். தற்போது அத்திரைப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. ஹிந்தி ரீமேக்குக்கும் அனிருத்தே இசையமைக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in