ரஜினியுடன் நான்காவது முறையாக இணையும் அனிருத்

அனிருத்துடன் நடிகர் ரஜினிகாந்த்.
அனிருத்துடன் நடிகர் ரஜினிகாந்த்.ரஜினியுடன் நான்காவது முறையாக இணையும் அனிருத்

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது பட த்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், மோகன்லால் என பலர் நடிக்கின்றனர். இதையடுத்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த இயக்கும் 'லால் சலாம்' படத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இதனையடுத்து ரஜினிகாந்த் நடிக்கும் 'தலைவர் 171' படத்தை இயக்கப்போவது யார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்தப் படத்தை சிபி சக்கரவர்த்தி, பிரதீப் ரங்கநாதன் ஆகியோரில் ஒருவர் இயக்குவார் என்று தகவல் பரவியது. நடிகர் சூர்யா நடித்த 'ஜெய்பீம்' படத்தை இயக்கிய ஞானவேல், ரஜினிகாந்தின் 171-வது படத்தை இயக்க உள்ளதாகவும், லைக்கா இப்படத்தை தயாரிக்க உள்ளதாகவும் தற்போது தகவல் பரவி வருகிறது. இப்படத்தில் அனிருத் இசையமைக்க உள்ளதாக கூறப்படுகிறது.

ரஜினி நடித்த 'பேட்ட', 'தர்பார்', 'ஜெயிலர்' படத்தைத் தொடர்ந்து நான்காவது முறையாக ரஜினியுடன் 'தலைவர் 171' படத்தில் நடிகர் அனிருத் இணைய உள்ளார்.

Related Stories

No stories found.
x
காமதேனு
kamadenu.hindutamil.in